மதுரை: தூய்மைப் பணியாளர் கொடுத்த புகாரில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது - காவல்துறை விளக்கம்

வழக்குகள் முழுமையாக முடித்து வைக்கப்பட்டுவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை: தூய்மைப் பணியாளர் கொடுத்த புகாரில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது - காவல்துறை விளக்கம்
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்டம், கம்பூர் கிராம வழக்கு நிலை தொடர்பான காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், கம்பூர் கிராமத்தில் தூய்மை காவலர் திருமதி சசிகலா என்பவர் ஊராட்சி செயலாளர் ரூபா என்பவர் மீது கொடுத்த புகாரின் பேரில், கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் குற்ற எண்: 355/2026-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், இது தொடர்பாக ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற போது மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும், மற்றொரு வழக்கு கொட்டாம்பட்டி காவல் நிலைய குற்ற எண்: 358/2026 -ன் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவோ அல்லது முழுமையாக முடித்து வைக்கப்பட்டுவிட்டதாகவோ ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின்றன.

இவ்வழக்குகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை; காவல் துறையினரால் சட்டப்படி புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com