மதுரை மேயர் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு...!

மதுரை மேயர் இந்திராணி வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மேயர் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு...!
Published on

தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நல்வாழ்வு மையம் அமைப்பதற்கான பூமி பூஜை திருப்பங்குன்றத்தை அடுத்த துர்கா காலனி பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மண்டலத் தலைவர் சுவிதா விமல் தலைமை வகித்தார். மாநகராட்சி கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ் முன்னிலை வகித்தார்.

இதில் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏற்கனவே இப்பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட கழிப்பறை பல ஆண்டுகளாக பூட்டி கிடப்பதாகவும், அதனை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் எங்கள் பகுதியில் குடிநீர், சாலை வசதிகள் இல்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி மேயர் இந்திராணி வாகனத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.பின்னர், அங்கிருந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் சமாதானம் பேசி அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com