

மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சகராக இருப்பவரின் தாயார் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த அவர் உயிரிழந்து விட்டார். அவருக்கு வயது 71. இதனை அடுத்து அர்ச்சகர் மற்றும் அவருடன் பணியாற்றிய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பணியாளர்களை தனிமைப்படுத்தி, பரிசோதனை நடத்தப்பட்டது. கொரோனா உயிரிழப்பு வழிகாட்டுதல்படி அர்ச்சகரின் தாயார் உடல் அடக்கம் நடந்தது. மதுரையில் அண்ணாநகரில் கடந்த மார்ச் 25ந்தேதி கொரோனா பாதிப்புக்கு 50 வயது கடந்த ஆண் ஒருவர் பலியானார்.