மதுரை: சித்திரை திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தல்- அமைச்சர் கே.என்.நேரு


மதுரை: சித்திரை திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தல்- அமைச்சர் கே.என்.நேரு
x

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்று எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

சென்னை

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும், அந்த கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே சித்திரைத் திருவிழாவுக்கு மின்சாரம் வழங்க முடியும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருக்கும் தகவல் அமைச்சருக்கு தெரியுமா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சித்திரைத் திருவிழாவுக்கான முழு ஏற்பாடுகளையும் மதுரை மாநகராட்சி நிர்வாகமே செய்ய வேண்டும் எனவும், பணத்தை பற்றி கவலைப்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

1 More update

Next Story