தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை - பழனி சிறப்பு ரெயில்கள்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு: மதுரை, பழனி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது,
தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை - பழனி சிறப்பு ரெயில்கள்
Published on

மதுரை,

பழனி தண்டாயுதபாணி கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக மதுரை, பழனி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதன்படி மதுரை, பழனி இடையே பிப்ரவரி 11-02-2025 ( செவ்வாய்) மற்றும் 12-02-2025 (புதன்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

மதுரை - பழனி இடையே தைப்பூச சிறப்பு ரெயில் (06722) குறிப்பிட்ட இரு நாட்களிலும் மதுரையிலிருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு பழனி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் பழனி மதுரை தைப்பூச சிறப்பு ரெயில் (06721) பழனியில் இருந்து மாலை 3.00 மணிக்கு புறப்படுகிறது..

இந்த சிறப்பு ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் முற்றிலும் முன்பதிவில்லா 16 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன என்றும் தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com