மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு: பாம்பன் பாலத்தின் தண்டவாளம் பராமரிப்பு பணி

பராமரிப்பு பணி காரணமாக ராமேஸ்வரம் - மதுரை தினசரி ரயிலை மண்டபம் வரை இயக்கப்படும் என மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம்  முக்கிய அறிவிப்பு: பாம்பன் பாலத்தின் தண்டவாளம் பராமரிப்பு பணி
Published on

மதுரை,

தெற்கு ரெயிவே மதுரை கோட்டம் பாம்பன் பாலத்தில் தண்டவாளம், மின் வழித்தடம், மின் கம்பிகள் போன்றவை பராமரிப்பு பணிகள் ரெயில்வே நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது. மேலும் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து மீன்கள் ஏற்றுமதி, மதுரையில் இருந்து வணிக பொருட்கள் ஏற்றுமதி மற்றும் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிகளுக்கு செல்பவர்களின் வசதிக்காக தினமும் மூன்று ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதன் காரணமாக மதுரை - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் தினசரி ரெயில்கள் ( வண்டி எண் - 56711, 56714 ) ஏப்ரல் 9, 10, 11, 13, 16, 17, 18, 20, 21, 22, 24 ஆகிய நாட்களில் மதுரையில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மண்டபம் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இதே நாட்களில் மறு மார்க்கத்தில் மதுரைக்கு செல்ல ராமேஸ்வரம் ரெயில் நிலையம் செல்லாமல் மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அதற்கு ஏற்றதுபோல் பயணிகள் பயணவசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com