மதுரை: நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலால் ரவுடி வெட்டிக்கொலை


மதுரை: நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலால் ரவுடி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 23 March 2025 10:21 AM IST (Updated: 23 March 2025 10:52 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலால் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்டார்.

மதுரை


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மொட்டமலை பகுதியில் ரவுடி காளீஸ்வரன் 4 பேர் கொண்ட மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட நிகழ்ந்துள்ளது. நேற்றிரவு வீட்டின் வெளியே வந்த காளீஸ்வரனை 3 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் வெட்டியதாக கூறப்படுகிறது.

காளீஸ்வரன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன்விரோதம் காரணமாக காளீஸ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே சிறையிலிருந்தே சதித் திட்டத்தை தீட்டியதாக மற்றொரு ரவுடி மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளநிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story