

மதுரை,
மதுரை அருகே தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இயற்பியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
12-ம் வகுப்பு மாணவிகளுக்கு நேரடியாகவும், போன் மூலமாகவும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் மீது மாணவிகள் சிலர் மாவட்ட கலெக்டரிடம் ரகசியமாக புகார் அளித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவிகளுக்குபாலியல் தொல்லை அளித்த இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார், ஹாஸ்டல் வார்டன் உள்ளிட்ட 4 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.