மதுரை ரெயில் தீ விபத்து; தனியார் சுற்றுலா நிறுவனம் மீது தெற்கு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மீது தெற்கு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை ரெயில் தீ விபத்து; தனியார் சுற்றுலா நிறுவனம் மீது தெற்கு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு
Published on

மதுரை,

உத்தர பிரதேசத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்கு வந்த சுற்றுலா ரெயிலில் மதுரை ரெயில் நிலையம் அருகே இன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரெயிலில் சுற்றுலா பயணிகள் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமையல் செய்தபோது, அது வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரெயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக உத்தர பிரதேச மாநிலம் சித்தாப்பூரைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மீது தெற்கு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்யவும் லக்னோ காவல்துறைக்கு தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com