30 விநாடிகளில் 29 எரியும் கான்கிரீட் கற்கள் உடைப்பு - கின்னஸ் சாதனை படைத்த மதுரை இளைஞர்

மதுரை இளைஞர் ஒருவர் தனது 33-வது கின்னஸ் சாதனையாக 30 வினாடிகளில் 29 எரியும் கான்கிரீட் கற்களை உடைத்து சாதனை படைத்துள்ளார்.
30 விநாடிகளில் 29 எரியும் கான்கிரீட் கற்கள் உடைப்பு - கின்னஸ் சாதனை படைத்த மதுரை இளைஞர்
Published on

மதுரை,

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் விஜய் நாராயணன். டேக்வாண்டோவில் பயிற்சி பெற்ற இவர், பல்வேறு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் டேக்வாண்டோவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் இதுவரை 32 கின்னஸ் சாதனைகளை இவர் நிகழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில், தனது 33-வது கின்னஸ் உலக சாதனையாக 30 வினாடிகளில் 29 எரியும் கான்கிரீட் கற்களை கைகளால் உடைத்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது இம்ரான் என்பவர் 30 வினாடிகளில் 25 கான்கிரீட் கற்களை உடைத்ததே உலக சாதனையாக இருந்தது. இந்த நிலையில் அந்த சாதனையை விஜய் நாராயணன் முறியடித்துள்ளார்.

இந்த உலக சாதனையை அங்கீகரித்த கின்னஸ் உலக சாதனை நிறுவனம், நாராயணனை பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com