மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்: 931 பேரிடம் தபால் வாக்குப்பதிவு

மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் 80-வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஏன மொத்தம் 931 பேர் தபால் ஓட்டை செலுத்த தகுதி பெற்றுள்ளனர்
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்:   931 பேரிடம் தபால் வாக்குப்பதிவு
Published on

மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சி என ஐந்து முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுராந்தகம் தொகுதி தபால் ஓட்டுகள் பதிவு செய்யும் பணி நேற்று தொடங்கியது.

மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் 80-வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஏன மொத்தம் 931 பேர் தபால் ஓட்டை செலுத்த தகுதி பெற்றுள்ளனர். இதில் 80 வயதுக்கு மேற்பட்டோம் 451 வாக்காளர்கள் மற்றும் 480 மாற்றுத்திறனாளிகள் ஆவர். தேர்தல் ஆணையத்தின் சார்பில் 8 சிறப்பு நிலை குழுக்கள் அமைக்கப்பட்டு வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டு பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழிப்புணர்வு

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க மதுராந்தகம் நகராட்சி நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்றனர் இதனை மாவட்ட கலெக்டா வீரப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பயணிகளிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் துராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் நரேந்திரன், கூட்டுறவு ங்கங்களின் இணைப்பதிலாளர் மலர்விழி, மாவட்ட வாற்றுத்திறனாளிகள் நல அலுவவர் கதிர்வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com