கடம்பூர் அருகே இறந்து கிடந்த மக்னா யானை

கடம்பூர் அருகே இறந்து கிடந்த மக்னா யானை
கடம்பூர் அருகே இறந்து கிடந்த மக்னா யானை
Published on

டி.என்.பாளையம்

கடம்பூர் வனச்சரகத்துக்குட்பட்ட எக்கத்தூர் வனக்காவல் சுற்று காப்புக்காடு வனப்பகுதி கச்சப்பள்ளம் என்ற இடத்தில் கடம்பூர் வனக்காப்பாளர் அர்த்தநாரீஸ்வரர் தலைமையில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 30 வயது மதிக்கத்தக்க "மக்னா" யானை இறந்து கிடந்துள்ளது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வன கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான டாக்டர் குழுவினர் வனத்துறையினருடன் அங்கு சென்று இறந்து கிடந்த "மக்னா" யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் யானையின் உடல் மற்ற விலங்குகளுக்கு உணவாக அங்கேயே விடப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகே யானையின் இறப்பு குறித்து காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com