ராமாபுரம் செல்வவிநாயகர் மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

ராமாபுரம் செல்வ விநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனநம் செய்தனர்.
ராமாபுரம் செல்வவிநாயகர் மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
Published on

சேத்துப்பட்டு

ராமாபுரம் செல்வ விநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேத்துப்பட்டை அடுத்த அனாதிமங்கலம் மதுரா இராமாபுரம் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையொட்டி கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின. அதன்படி கோவிலுக்கு முன்பு பெரிய பந்தல் அமைத்து 3 யாக குண்டங்களில் கங்கை, யமுனை உள்பட பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் நிரப்பிய 108 கலசம் வைத்து சிவா சர்மா தலைமையில் யாகம் வளர்த்து கணபதி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை மற்றும் 3 கால பூஜைகள் நடந்தன.

அதன்பின் கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் கோவில் கோபுரத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அதிலிருந்த புனித நீர் கோபுரத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் ராமாபுரம், அனாதிமங்கலம், கோனாமங்கலம், மேலப்பூண்டி, உலகம்பட்டு, தத்தனூர் சேத்துப்பட்டு உள்பட பல்வே பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு புஷ்ப பல்லக்கில் மாரியம்மன் வீதி உலா நடந்தது. இதைத் தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை தொடங்கியது. கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை ராமாபுரம் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com