கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று மஹா சிவராத்திரி விழா

கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று மஹா சிவராத்திரி விழா நடைபெறுகிறது.
கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று மஹா சிவராத்திரி விழா
Published on

கோவை,

கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி ஈஷா யோகா மையத்தின் 26-வது ஆண்டு மஹாசிவராத்திரி விழா இன்று இரவில் தொடங்கி மறுநாள் காலை வரை விடிய, விடிய நடக்கிறது. ஆடல், பாடல், நடனம் மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் நடக்கும் இந்த விழாவில் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கிவாசுதேவ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பகல் 1:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை அவர் பார்வையிடுகிறார்.

துணை ஜனாதிபதி கோவை வருகையையொட்டி மத்திய ரிசர்வ் போலீசார், உள்ளூர் போலீசார், மத்திய அதிவிரைவு படை போலீசார், புறநகர் போலீசார் ஆகியோர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மஹா சிவராத்திரி விழாவில், தியான லிங்கத்தில் நடத்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் துவங்கி, லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணைக்கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெறுகிறது. விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு, ஆதியோகி ஓராண்டாக அணிந்திருந்த ஒரு லட்சத்து 8 ருட்ராட்ச மணிகள், சர்ப்ப சூத்திரம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com