மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் ஜெயலலிதாவிற்கு திதி கொடுத்த அதிமுக நிர்வாகிகள்...!

ராமேசுவரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு அதிமுக நிர்வாகிகள் திதி கொடுத்தனர்.
மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் ஜெயலலிதாவிற்கு திதி கொடுத்த அதிமுக நிர்வாகிகள்...!
Published on

ராமேசுவரம்,

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள புண்ணிய தலங்களில் இறந்த முன்னோர்களுக்கு உறவினர்கள் திதி கொடுத்தனர்.

இதேபோன்று சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சாத்தப்பாடி பால் சொசைட்டி தலைவர் செந்தில்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றதுணைச் செயலாளர் லோகநாதன், தலைவாசல் வடக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவுசெயலாளர் செந்தில் குமார் ஆகியோர் இன்று ராமேசுவரத்திற்கு சென்றனர்.

அங்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்து திதி கொடுத்து வணங்கி மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com