மகாமாரியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்

பாவளம் மகாமாரியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
மகாமாரியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்
Published on

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே பாவளம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா அடுத்த மாதம் (ஜூலை) நடைபெற உள்ளது. ஆனால் இந்த கோவிலுக்கு என்று தனியார் தேர் இல்லாததால், விழாக்காலங்களில் அருகில் உள்ள கோவிலுக்கு சொந்தமான தேரை கொண்டு வந்து தேரோட்டம் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் மகா மாரியம்மன் கோவிலுக்கு புதிதாக தேர் செய்து தேரோட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிதாக தேர் செய்யப்பட்டது. இதையடுத்து தேர்வெள்ளோட்ட நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் சிறப்பு யாக பூஜையும் நடந்தது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com