சென்னை-கொல்கத்தா சென்ற ஹவுரா ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன

சென்னையில் இருந்து கொல்கத்தா சென்ற ஹவுரா ரெயிலின் 3 பெட்டிகள் இன்று அதிகாலை மகாராஷ்டிரா அருகே தடம் புரண்டன.
சென்னை-கொல்கத்தா சென்ற ஹவுரா ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன
Published on

சென்னை,

சென்னையில் இருந்து கொல்கத்தா நோக்கி 12840 என்ற எண் கொண்ட ஹவுரா ரெயில் புறப்பட்டு சென்றது. அது மகாராஷ்டிராவில் இகாத்புரி ரெயில்வே நிலையம் அருகே இன்று அதிகாலை வந்தபொழுது ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் தடம் புரண்டது ஏன் என்பது பற்றிய தகவல்கள் தெரிய வரவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com