

கோவை,
தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் ரவிந்திரன் கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஈஷாவில் 23-வது மகாசிவராத்திரி கொண்டாட்டம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடை பெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஆதியோகி சிலை முன்பு மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது.
சற்குரு ஜக்கிவாசுதேவுடன் நடைபெறும் விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த ஆண்டு முதல்முறையாக சத்குரு ஜக்கிவாசுதேவ், ஆதியோகி சிலை முன்பு இருக்கும் யோகேஷ்வர லிங்கத்திற்கு மகா அபிஷேகம் செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.