மகாவீர் ஜெயந்தி: சென்னையில் ஏப். 4-ல் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவு..!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாவீர் ஜெயந்தி: சென்னையில் ஏப். 4-ல் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவு..!
Published on

சென்னை,

மகாவீர் ஜெயந்தியை வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில் கூறும்போது,

ஏப்ரல் 4-ந் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்பு களைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூட வேண்டும்.

தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com