மகாவீரர் ஜெயந்தி: சமண சமய மக்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

பகவான் மகாவீரர் வழியில் தொடர்ந்து பயணிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
 மகாவீரர் ஜெயந்தி: சமண சமய மக்களுக்கு  டிடிவி தினகரன் வாழ்த்து
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை மன மகிழ்வுடன் கொண்டாடி மகிழும் சமண சமய பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

கொல்லாமையும், பிற உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காமையுமே உண்மையான அறம் என்பதை எடுத்துரைத்ததோடு, தன் சுக வாழ்க்கையை துறந்து, அகிம்சையை பின் பற்றி, இயற்கை சக்திகளோடு இணைந்து அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று போதித்த பகவான் மகாவீரர் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்க நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம்.

அறநெறியினையும், ஆன்மீக நெறியினையும் தவறாது பின்பற்றி அதன் மாண்பை உலகிற்கே பறைசாற்றிய மகாவீரர் பிறந்த இந்த நாளில், அவரது போதனைகளை பின் பற்றும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com