மகாவீரர் ஜெயந்தி-வானதி சீனிவாசன் வாழ்த்து

சைத்ர மாதத்தின் 13-வது நாளில் மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
மகாவீரர் ஜெயந்தி-வானதி சீனிவாசன் வாழ்த்து
Published on

சென்னை,

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

மகாவீரர் ஜெயந்தி என்பது சமண சமயத்தின் 24-வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் பிறந்தநாளைக் கொண்டாடும் முக்கிய பண்டிகையாகும். இது சைத்ர மாதத்தின் 13-வது நாளில் (மார்ச்-ஏப்ரல்) கொண்டாடப்படுகிறது. அகிம்சை, உண்மை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் இப்பண்டிகை, சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாவீரரின் போதனைகளான வன்முறை தவிர்த்தல் (அகிம்சை), வாய்மை (சத்தியம்) திருடாமை, இன்பம் துய்க்காதிருத்தல், பொருளியலில் பற்று அற்று இருத்தல் ஆகியவற்றை நினைவில் கொள்வோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com