

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். இவர், தமிழ்நாட்டில், வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்குவதற்காக 'மகிழ்மதி இயக்கம்' என்ற அமைப்பை மூன்று வருடங்களுக்கு முன் தொடங்கினார்.
இலங்கையிலும் மணிப்பூரிலும் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் கைகோர்த்து திவ்யா சத்யராஜின் மகிழ்மதி இயக்கம் இப்போது செயல்பட ஆரம்பித்துள்ளது.
திவ்யாவின் சமூக சேவையை கவுரவிக்கும் வகையில் ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு, 2019ஆம் ஆண்டில் 'பெண் சாதனையாளர் விருது' வழங்கியது. ஊட்டச்சத்து சிகிச்சை துறையில் இவரது சிறந்த பங்களிப்புக்காக, அமெரிக்காவில் உள்ள சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம், 2020ஆம் ஆண்டு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.