ஒரு லட்சம் மரக்கன்றுகள் பராமரிப்பு

‘பசுமை தமிழ்நாடு' திட்டத்தின் கீழ், வனத்துறை சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஒரு லட்சம் மரக்கன்றுகள் பராமரிப்பு
Published on

தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் 'பசுமை தமிழ்நாடு' என்ற திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தரிசு நிலங்கள், விவசாய நிலங்கள், கல்வி நிறுவனங்களின் காலிஇடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட உள்ளது. இதற்காக அந்தந்த பகுதிகளில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி பழனியில், தேக்கந்தோட்டம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நர்சரியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் தேக்கு, மலைவேம்பு, மகாகனி, குமிழ் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு இந்த மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தமிழக வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பழனி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள், விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடுவதற்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பராமரித்து வருகிறோம். இந்த மரக்கன்றுகள் இலவசமாக வழங்கி நடுவதோடு மட்டுமல்லாமல், அதை முறையாக பராமரிக்க தேவையான ஆலோசனைகளும் வழங்க உள்ளோம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com