

சேலம்,
சேலம்- ஜோலார்பேட்டை ரெயில்வே வழித்தடத்தில் ஜோலார்பேட்டை-தொட்டம்பட்டி இடையே உள்ள தண்டவாள பாதையில் சிக்னல் மற்றும் பொறியியல் பராமரிப்பு பணிகள் வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இதை யொட்டி அன்றைய தினம் சேலம் வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்லும் 6 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதாவது, அரக்கோணம்- சேலம் மெமுரெயில் (வண்டி எண்-16087), சேலம்- அரக்கோணம் மெமுரெயில் (வண்டி எண்-16088), ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் (வண்டி எண்-56108), ஜோலார் பேட்டை- ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண்-56107), கோவை-சென்னை சென்டிரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12680), சென்னை சென்டிரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12679) ஆகிய 6 ரெயில்கள் வருகிற 24-ந் தேதி ஒருநாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மாற்றுப்பாதையில் இயக்கம்
அதேபோல், சேலம் வழியாக செல்லும் 3 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கோவை-கே.எஸ்.ஆர்.பெங்களூரு டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22666) வருகிற 24-ந் தேதி சேலம்-பெங்களூரு இடையே தர்மபுரி. ஒசூர் வழியாக இயக்கப்படும்.
ஆனால் அந்த ரெயில் வழக்கமாக செல்லும் வழியான திருப்பத்தூர், குப்பம், கிருஷ்ணராஜபுரம் ரெயில் நிலையங்களுக்கு செல்லாது. கே.எஸ்.ஆர்.பெங்களூரு- கோவை டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22665) பெங்களூரு- சேலம் இடையே ஒசூர், தர்மபுரி வழியாக கோவைக்கு இயக்கப்படும். அந்த ரெயில் வழக்கமாக செல்லும் வழியான கிருஷ்ணராஜபுரம், குப்பம். திருப்பத்தூர் ரெயில் நிலையங்களுக்கு செல்லாது.
நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ்
அதேபோல், நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16340) வருகிற 24-ந் தேதி ஒருநாள் மட்டும் திண்டுக்கல்- காட்பாடி இடையே திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
ஆனால் இந்த ரெயில் வழக்கமாக செல்லும் கரூர், நாமக்கல், சேலம். சாமல்பட்டி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்க ளுக்கு செல்லாது என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.