

சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட சைதாப்பேட்டை மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், பொதுமக்கள் அன்னை சத்யா நகர் மற்றும் கண்ணம்மாபேட்டை மயானபூமியினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-139க்குட்பட்ட சைதாப்பேட்டை மயானபூமியில் எரிவாயு தகனமேடையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால், 17.07.2026 முதல் 05.08.2026 வரை 20 நாட்கள் மேற்கண்ட மயானபூமி இயங்காது.
எனவே, பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நாட்களில், பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு-138க்குட்பட்ட அன்னை சத்யா நகர் மயானபூமி மற்றும் வார்டு-141க்குட்பட்ட கண்ணம்மாபேட்டை மயானபூமியினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.