செங்கல்பட்டு பணிமனையில் பராமரிப்பு பணி: மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து!

செங்கல்பட்டு - சிங்கபெருமாள் கோவில் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
மின்சார ரெயில்
Published on: 

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பராமரிப்பு பணி

சென்னை கடற்கரை-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள செங்கல்பட்டு பணி மனையில் இன்று (திங்கட்கிழமை) காலை 11.40 மணி முதல் மாலை 3.10 மணி வரையில் (3 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

பகுதி நேர ரத்து

சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.48, மதியம் 12.30 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் சிங்க பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் இருந்து இன்று மதியம் 1.05, மாலை 3 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு - சிங்கபெருமாள் கோவில் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X