

சென்னை,
தெற்கு ரெயில்வேயின் சென்னை மண்ட லத்தில் உள்ள அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* கே.எஸ்.ஆர். பெங்களூரு-டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12608) வருகிற 6-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். காட்பாடி-சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் (12607) வருகிற 6-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை சென்னை-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுகிறது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து புறப்பட உள்ளது.
* டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-அசோகபுரம் (மைசூரு) எக்ஸ்பிரஸ் ரெயில் (16551) வருகிற 6-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை காட்பாடியில் இருந்து இயங்க உள்ளது. சென்னை-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், அசோகபுரம்-டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (16552) வருகிற 6-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை காட்பாடி வரை மட்டுமே இயங்கும். இந்த ரெயில் காட்பாடி-சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.