

திருப்பூர்,
ஈரோடு - சேலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே மகுடஞ்சாவடி ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை எளிதாக்கும் வகையில் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, எர்ணாகுளம் டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.18190) நாளை (திங்கட்கிழமை) மற்றும் வருகிற 1-ந்தேதி எர்ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு வசதியான இடத்தில் 50 நிமிடங்கள் நிறுத்தப்படும். ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352) நாளை மற் றும் வருகிற 1-ந்தேதி ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு வசதியான இடத்தில் 20 நிமிடங்கள் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.