ஈரோடு - சேலம் இடையே பராமரிப்பு பணிகள்: கேரள ரெயில்கள் தாமதமாக இயக்கம்

தண்ட வாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கேரள ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட உள்ளது.
ஈரோடு - சேலம் இடையே பராமரிப்பு பணிகள்: கேரள ரெயில்கள் தாமதமாக இயக்கம்
Published on

கோவை,

ஈரோடு - சேலம் இடையே உள்ள மகுடஞ்சாவடி பகுதியில் ரெயில் தண்ட வாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கேரள ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரெயில்வே நிர்வாகம் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (புதன்கிழமை), 1-ந் தேதி. 3-ந் தேதி ஆகிய நாட்களில் எர்ணாகுளம் டாடா நகர் விரைவு ரெயில் (எண்: 18190) 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். இதேபோல் மேற்கண்ட நாட்களில் ஆலப்புழா - தன்பாத் விரைவு ரெயில் (எண்: 13352) 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com