பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் முடிந்ததும் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயிலாக திருச்சிக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்
Published on

சென்னை,

சேலம் கோட்டத்தில் ரெயில்வே பொறியியல் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை எளிதாக்கும் வகையில் குறிப்பிட்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிலாஸ்பூர்-எர்ணாகுளம் (வண்டி எண்.22815) வாராந்திர எக்ஸ்பிரஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) கோவை ரெயில் நிலையத்தை தவிர்த்து இருகூர்-போத்தனூர் வழியாக மாற்றி இயக்கப்படும்.

சென்னை எழும்பூர்-மங்களூரு (16159) எக்ஸ்பிரஸ் நாளை (புதன்கிழமை) பீளமேடு, கோவை வடக்கு மற்றும் கோவை ரெயில் நிலையங்களை தவிர்த்து இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும். திப்ரூகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (22504) நாளை கோவை ரெயில் நிலையத்தில் நிற்காமல் இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும்.

ஆலப்புழா-தன்பாத் (13352) எக்ஸ்பிரஸ் நாளை, வருகிற 7, 9, 11 மற்றும் 14-ந்தேதிகளில் கோவை ரெயில் நிலையத்தில் நிற்காமல் போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரெயில்களுக்கு போத்தனூரில் மாற்று நிறுத்தம் வழங்கப்படும். பாலக்காடு டவுன்-திருச்சி (16844) எக்ஸ்பிரஸ் இன்று காலை 6.30 மணிக்கு பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கரூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்ததும் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயிலாக திருச்சிக்கு இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com