பராமரிப்பு பணி: கும்மிடிப்பூண்டி ரெயில் சேவையில் மாற்றம்


பராமரிப்பு பணி: கும்மிடிப்பூண்டி ரெயில் சேவையில் மாற்றம்
x

கோப்புப்படம்

பராமரிப்பு பணிகள் காரணமாக மே 31, ஜூன் 2 தேதிகளில் 19 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை,

பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மே 31, ஜூன் 2 தேதிகளில் 19 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

காலை 11.15 மணி முதல் மாலை 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பயணிகள் வசதிக்காக மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர் இடையே 6 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளனது

1 More update

Next Story