

மதுரை,
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. ஒரு சில ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) வருகிற 17-ந்தேதி சுமார் 50 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். வருகிற 10-ந்தேதி மற்றும் 24-ந்தேதிகளில் செல்லும் வழியில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக இயக்கப்படும். நாளை (சனிக்கி ழமை), வருகிற 7-ந்தேதி, 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை, 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை செல்லும் வழியில் சுமார் 25 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.
கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12666) நாளை, வருகிற 13-ந்தேதி மற்றும் 20-ந்தேதிகளில் செல்லும் வழியில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்.
நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16352) வருகிற 7-ந் தேதி, 11-ந் தேதி, 14-ந் தேதி, 18-ந் தேதி மற்றும் 21-ந் தேதிகளில் செல் லும் வழியில் சுமார் 45 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.
தூத்துக்குடி-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.17616) வருகிற 10-ந் தேதி மற்றும் 17-ந் தேதிகளில் செல்லும் வழியில் சுமார் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப் படும். இந்த ரெயில்கள் அனைத்தும் ஏற்கனவே, மதுரை, விருதுநகர், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.