பராமரிப்பு பணி: 12 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம்

உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணி: 12 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம்
Published on

சென்னை,

கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக 12 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி யஷ்வந்த்பூர் -மங்களூரு சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் (16565) வருகிற 2-ந்தேதி யும், மங்களூரு சென்ட்ரல் -யஷ்வந்த்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16566) வருகிற 3-ந்தேதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கே.எஸ்.ஆர். பெங்களூருவிலிருந்து அதிகாலை 5.10 மணிக்கு கிளம்ப வேண்டிய கே.எஸ்.ஆர். பெங்களூரு -எர்ணாகுளம் சந்திப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 26651) நாளை மறுநாள் (சனிக்கிழமை), 2, 3, 4-ந்தேதிகளில் பெங்களூரு கண்டோன்மென்ட் நிலையத்திலிருந்து புறப்படும்.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்

கன்னியாகுமரியில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் 2-ந்தேதிகளில் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி -கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16525) மாற்றுப்பாதையில் அதாவது பைப்பன ஹள்ளியில் இருந்து எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வரை இயக் கப்படும். இதன் காரணமாக இந்த ரெயில் பெங்களூரு கிழக்கு, பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையங்களில் நிற்காது.

கே.எஸ்.ஆர். பெங்களூருவிலிருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட வேண்டிய கே.எஸ்.ஆர். பெங்களூரு -கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16526) நாளை மறுநாள், 2, 3-ந்தேதிகளில் எஸ்.எம்.வி.டி. பெங்களூருவிலிருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும்.

கோவை சந்திப்பிலிருந்து நாளை மறுநாள் 2, 3-ந்தேதிகளில் காலை 5.45 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை -கே.எஸ்.ஆர். பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22666), கிருஷ்ணராஜபுரம் முதல் கே.எஸ்.ஆர். பெங்களூரு வரையிலான வழித்தடத்தில் பகுதிய ளவு ரத்து செய்யப்பட்டு, எஸ்.எம்.வி.டி. பெங்களூரு நோக்கி மாற்றியமைக்கப்படும்.

கே.எஸ்.ஆர். பெங்களூருவிலிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட வேண்டிய கே.எஸ்.ஆர். பெங்களூரு -கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22665) நாளை மறுநாள், 2, 3-ந்தேதிகளில் எஸ்.எம்.வி.டி. பெங்களூருவிலிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும். வருகிற 3-ந்தேதி இயக்கப்படும் எர்ணாகுளம் சந்திப்பு -கே.எஸ்.ஆர். பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 26652) கிருஷ்ணராஜபுரத்துடன் நிறுத்தப்படும். கிருஷ்ணராஜபுரம் முதல் கே.எஸ்.ஆர். பெங்களூரு வரை இயக்கப்படாது.

லோக்மான்ய திலக்

யஸ்வந்த்பூரிலிருந்து பிற்பகல் 3.55 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டுள்ள யஸ்வந்த்பூர் -சேலம் ரெயில் (வண்டி எண் 16211) நாளை மறுநாள், 2, 3-ந்தேதிகளில் பனஸ்வாடியிலி ருந்து மாலை 4.22 மணிக்கு கிளம்பி சேலம் சந்திப்பு வரை இயக்கப்படும். சேலம் சந்திப்பிலிருந்து மாலை 5.20 மணிக்கு புறப்பட திட்ட மிடப்பட்டுள்ள சேலம் -யஸ்வந்த்பூர் ரெயில் (வண்டி எண் 16212) நாளை மறுநாள், 2, 3-ந்தேதிகளில் பனஸ்வாடியுடன் நிறுத்தப்படும். பனஸ்வாடி முதல் யஸ்வந்த்பூர் வரை இயக்கப்படாது.

லோக்மான்ய திலக் முனையம் -கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 11013) இன்று (வியாழக்கிழமை) நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 1, 2-ந்தேதிகளில் யலஹங்கா ஓசூர் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதன் காரணமாக பெங்களூரு கிழக்கு. பெங்களூரு கண் டோன்மென்ட் மற்றும் கே.எஸ்.ஆர். பெங்களூரு ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நிற்காது.

இதேபோல் கோவை -லோக்மான்ய திலக் முனையம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 11014) நாளை மறுநாள், 2, 3-ந்தேதிகளில் ஒசூர் -யலஹங்கா இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

இதன் காரணமாக பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் கே.எஸ்.ஆர். பெங்களூரு ஆகிய நிலையங்களில் இந்த ரெயில் நிற்காது என்று சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com