

திருப்பூர்,
ஈரோடு-கரூர் இடையே மூர்த்திபாளையம் ரெயில் நிலையம் பகுதியில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அந்த பணிகளை எளிதாக் கும் வகையில் குறிப்பிட்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சி-பாலக்காடு (வண்டி எண்.16843) எக்ஸ்பிரஸ் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) திருச்சியில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு கரூர் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படும். தொடர்ந்து பணி கள் முடிந்ததும் கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து பாலக்காடுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும். மேற்கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.