

சேலம்
ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள பெருந்துறை யார்டு பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி 2 ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி எர்ணாகுளம்- டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-18190) நாளை (சனிக்கிழமை) திருப்பூர் அருகே உள்ள வாஞ்சிபா ளையம் ரெயில் நிலையத்தில் 50 நிமிடம் நின்று அங்கிருந்து புறப்பட்டு செல்லும்.
இதேபோல் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-13352) நாளை திருப்பூர் ரெயில் நிலையத்தில் 30 நிமிடம் நின்று அங்கிருந்து புறப்பட்டு செல்லும். இந்த தகவல்கள் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.