

திருப்பூர்,
பாலக்காடு-சோரனூர் இடையே தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை எளிதாக்கும் வகையில் கோவை-சோரனூர் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை-சோரனூர் (வண்டி எண்.56603) பயணிகள் ரெயில் நாளை (சனிக்கிழமை) கோவையில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.
பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து சோரனூர் ரெயில் நிலையத்திற்கு இயக்கப்படாது. சோரனூர்-கோவை (56604) பயணிகள் ரெயில் நாளை மறு நாள் (ஞாயிற்றுக்கிழமை) சோரனூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப் பட வேண்டிய ரெயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை, திருப்பூர் ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.