பராமரிப்பு பணிகள் நிறைவு: மேட்டுப்பாளையத்துக்கு லாரியில் புறப்பட்ட ஊட்டி மலை ரெயில் என்ஜின்

திருச்சி பொன்மலை பணிமனையில் இருந்து ராட்சத லாரி மூலம் மேட்டுப்பாளை யத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பராமரிப்பு பணிகள் நிறைவு: மேட்டுப்பாளையத்துக்கு லாரியில் புறப்பட்ட ஊட்டி மலை ரெயில் என்ஜின்
Published on: 

திருச்சி,

திருச்சி பொன்மலை பணிமனையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந் ததை தொடர்ந்து மேட்டுப்பளையத்துக்கு ராட்சத லாரியில் ஊட்டி மலை ரெயில் என்ஜின் கொண்டு செல்லப்பட்டது.

மலை ரெயில்

மலைகளின் ராணி என்று போற்றப்படும் ஊட்டியையும், மேற்கு தொடர்ச்சி மலையினையும், பயணித்துக்கொண்டே ரசிக்கும் வகையில், மலைப்பாதையில் மலை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கண்கவர் வண்ணங்களுடன், பயணிகளை மகிழ்வித்து, ஊட்டி மலை அழகை கண்டுகளிக்க உதவும் ரெயில்களின் என்ஜின்கள் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டவை என்பது மலைக்கோட்டை மாநகரத்திற்கு கிடைத்த பெருமை.

அங்கு பாரம்பரிய முறையில் நிலக்கரி மூலம் இயக்கப்பட்டு வந்த ரெயில் என்ஜின்களை, தொடக்கத்தில் 'ஸ்டார்ட்' செய்வதற்காக 'பர்னஸ்' ஆயில் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர், டீசல், பயோ டீசல், குருடு ஆயில் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை...

தற்போது சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு என்ஜின் 'ஸ்டார்ட்' செய்வது முதல், தொடர்ந்து இயக்கப்படுவது வரை முழுக்க முழுக்க உயர்தர விரைவு டீசல் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. தற்போது ஊட்டியில் 9 ரெயில் என்ஜின்கள் பயன்பாட்டில் உள்ளன.

உயரமான மலைப்பாதைகளில் கடுமையான பயணத்தை மேற்கொள்ளும் என்ஜின் என்பதால், ரெயில்வே நிர்வாகம் எவ்வித சமரசமும் செய்துக் கொள்ளாமல், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ஜின்களை முழுமையாக பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

ராட்சத லாரி மூலம் அனுப்பி வைப்பு

அதன் ஒருபகுதியாக கடந்த வருடம் ஒரு என்ஜின் பராமரிப்புப் பணிக் காக பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு வந்தது. அந்த ரெயில் என் ஜின் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து நேற்று மாலையில் திருச்சி பொன்மலை பணிமனையில் இருந்து ராட்சத லாரி மூலம் மேட்டுப்பாளை யத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரெயில் என்ஜின் மேட்டுப்பாளையம் சென்றதும் அங்கிருந்து தண்டவாளம் மூலம் ஊட்டி கொண்டு செல்லப்படுகிறது. இதனை பொன்மனை பணிமனையில் ரெயில்வே ஊழி யர்கள் உற்சாகமாக அனுப்பி வைத்தனர்.

X