பராமரிப்பு பணிகள்: ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில் சேவையில் மாற்றம்

ரெயில் பாலங்களில் பொறியியல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
சேலம்,
சேலம் - ஜோலார்பேட்டை பிரிவில் உள்ள சாமல்பட்டி - திருப்பத்தூர் ெரயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் பாலங்களில் பொறியியல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு - ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் (வண்டி எண்-56108) தினமும் காலை 6 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும். ஆனால் இந்த ரெயில் நாளை (சனிக்கிழமை) மற்றும் 8, 9 மற்றும் 13-ந் தேதிகளில் ஈரோட்டில் இருந்து மொரப்பூருக்கு மட்டுமே இயக்கப்படும். மொரப்பூரில் இருந்து ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படாது.
இதேபோல், ஜோலார்பேட்டை - ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண்-56107) நாளை (சனிக்கிழமை) மற்றும் 8, 9, 13-ந் தேதிகளில் ஜோலார்பேட்டையில் இருந்து மொரப்பூர் வரை இயக்கப்படாது. அதற்கு பதிலாக மொரப்பூரில் இருந்து புறப்பட்டு ஈரோட்டுக்கு இயக்கப்படும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






