

சேலம்,
திருப்பூர்-ஈரோடு இடையே ஊத்துக்குளி ரெயில் நிலையம் பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் கேரள ரெயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ரெயில் பாதையில் பொறியியல் பராமரிப்பு பணிகளால் இன்று (சனிக்கிழமை) மற்றும் 18-ந் தேதி ஆகிய நாட்களில் எர்ணாகுளம்- டாடாநகர் விரைவு ரெயில் (எண்:- 18190) திருப்பூர் அருகே வஞ்சிபாளையம் நிலையத்துக்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். இதேபோல் இன்று மற்றும் வருகிற 18-ந் தேதி ஆகிய நாட்களில் ஆலப்புழா-தன்பாத் விரைவு ரெயில் (எண்:- 13352) திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.