பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை

சென்னையில் பெருங்களத்தூர், முடிச்சூர், நந்தம்பாக்கம், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை
Published on

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் நாளை (31.5.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அதன்படி பெருங்களத்தூர் பகுதியில் காந்தி சாலை, கிருஷ்ணா சாலை, முத்துவேலர் சாலை, என்ஜிஓ காலனி, ஆர்எம்கே நகர், பாரதி நகர், காமாட்சி நகர், சேகர் நகர், கல்கி தெரு, டேவிட் நகர் மற்றும் ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி (இரணியம்மன் கோயில் பின்புறம்) ஆகிய இடங்களிலும், முடிச்சூர் பகுதியில் அமுதம் நகர், ஏ.என்.காலனி, அஷ்டலட்சுமி நகர், சாஸ்திரி நகர், புவனேஸ்வரி நகர், ராயப்பா நகர், வி.எம்.கார்டன் நகர் ஆகிய இடங்களிலும், நந்தம்பாக்கம் பகுதியில் மணப்பாக்கம் மற்றும் கொளப்பாக்கம் சாலை, காசாகிராண்ட் கேஸ்டில் மற்றும் வுட் சைட், கிரிகோரி நகர், இந்திரா நகர், லக்ஷ்மி நகர், பிள்ளையார் கோயில் தெரு, பெல் நகர், ஸ்ரீராம் கார்டன், மைக்ரோமார்வெல், தர்மராஜபுரம், வல்லீஸ்வரன் கோயில் தெரு, பிபிசிஎல் பேஸ் 1 மற்றும் 2 ஆகிய இடங்களிலும், மாடம்பாக்கம் பகுதியில் படுவாஞ்சேரி, அகரம், அன்னை சத்திய நகர், வெல்கம் காலனி, பிள்ளையார் கோயில் தெரு, குறிஞ்சி நகர், சாய் பாலாஜி நகர் ஆகிய இடங்களிலும் நாளை (31.5.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com