பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை


பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை
x

சென்னையில் நாளை மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் நாளை (9.1.2026, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

வளசரவாக்கம்: விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், சுரேஷ்நகர், கைக்கான் குப்பம், வி.ஓ.சி.தெரு, பாரதிகாலனி, ஆற்காடு சாலை, கிழக்கு காமகோடிநகர், திருவள்ளுவர் தெரு, எஸ்.வி.எஸ்.நகர், சௌத்ரிநகர், இந்திராநகர், மசூதி தெரு, பெரியார்நகர், மீனாட்சியம்மன்நகர், லட்சுமிநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர்: நண்பர்கள்நகர், ராஜேஸ்வரிநகர், வைத்திநகர், பாரி கார்டன், ராயல் சிட்டி, மலையம்பக்கம், பிள்ளையார் கோவில் தெரு, ரஹ்மத்நகர், சக்திநகர், எல்.கே.பி.நகர், வசந்தபுரி, எஸ்.பி. அவென்யு, தேவதாஸ்நகர், சுமித்ராநகர், ருக்மணிநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story