

சென்னை,
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக சென்னையில் 3 மண்டலங்களில் இன்று காலை 9 மணி முதல் நாளை (13-ந்தேதி) காலை 9 மணி வரை குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது.
மண்டலம் 13 (அடையாறு): திருவான்மியூர், வேளச்சேரி, கோட்டூர் கார்டன், ஆர்.கே.மடம் தெரு, இந்திரா நகர் OHT.
மண்டலம் 14 (பெருங்குடி): கொட்டிவாக்கம், பாலவாக்கம், கந்தன்சாவடி, பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், ஜல்லடியான்பேட்டை, உள்ளகரம், புழுதிவாக்கம்.
மண்டலம் 15 (சோழிங்கநல்லூர்): ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, காரப்பாக்கம், வெட்டுவான்கேணி, சோழிங்கநல்லூர், ஒக்கியம்-துரைப்பாக்கம்.
மேற்கண்ட பகுதிகளில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலமஅ் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரிய்யத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.