பராமரிப்புப் பணிகள்: திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம்

திருச்சி வழியாக செல்லும் சில ரெயில்களின் சேவையில் தெற்கு ரெயில்வே மாற்றம் செய்யதுள்ளது.
பராமரிப்புப் பணிகள்: திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம்
Published on

திருச்சி,

எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பேரணி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் திருச்சி வழியாக செல்லும் சில ரெயில்களின் சேவையில் தெற்கு ரெயில்வே மாற்றம் செய்யதுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

* எழும்பூரில் இருந்து இன்று (வியாழக்கிழை), நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் மாலை 3.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.20665), 20 நிமி டம் தாமதமாக நெல்லை சென்றடையும்.

* எழும்பூரில் இருந்து இன்று (3-ந்தேதி), நாளை (4-ந்தேதி), நாளை மறு நாள் (5-ந்தேதி) ஆகிய தேதிகளில் மதியம் 1.15 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதமாக மதுரை சென்றடையும்.

* தாம்பரத்தில் இருந்து இன்று (3-ந்தேதி) மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06109), 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக திருவனந்தபு ரம் சென்டிரல் சென்றடையும்.

* தாம்பரத்தில் இருந்து நாளை (4-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06059), 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக போடிநாயக்க னூர் சென்றடையும்.

இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com