பராமரிப்பு பணிகள்: சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நாளை மின்சார ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் அனைத்து மின்சார ரெயில்களும் நாளை காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5 மணி முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டுக்கு 23 சிறப்பு ரெயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதே போல, சென்னை பூங்காவில் இருந்து 14 சிறப்பு ரெயில்கள் தாம்பரத்திற்கு இயக்கப்படும்.

இதே போல, செங்கல்பட்டில் இருந்து காலை 4 மணியில் இருந்து 30 நிமிட இடைவெளியில் பூங்கா ரெயில் நிலையத்திற்கு 25 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து காலை 3.55 மணியில் இருந்து 30 நிமிட இடைவெளியில் சென்னை பூங்கா ரெயில் நிலையத்திற்கு 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com