மக்காச்சோளம் அறுவடை தீவிரம்

நாஞ்சிக்கோட்டை பகுதியில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மக்காச்சோளம் அறுவடை தீவிரம்
Published on

நாஞ்சிக்கோட்டை,

நாஞ்சிக்கோட்டை பகுதியில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மக்காச் சோளம்

தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியில் உள்ள சூரியம்பட்டி, மருங்குளம், ஏழுபட்டி, மின்னாத்தூர், குருங்குளம், தங்கப்ப உடையான் பட்டி, தோழகிரிபட்டி, கொத்தம்பட்டி, திருக்கானூர் பட்டி உள்ளிட்ட பல்வேறு மேட்டுப்பகுதி கிராமங்களில் உள்ள விவசாயிகள் கோடை சாகுபடியாக மக்காச்சோளத்தை சாகுபடி செய்திருந்தனர். தற்பாது மக்காச்சோளம் அறுவடையை மேற்கண்ட பகுதியில் விவசாயிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

விவசாயிகள் கவலை

கடந்த ஆண்டு ஏக்கருக்கு 20 குவிண்டால் முதல் 30 குவிண்டால் வரை மகசூல் கிடைத்ததாகவும், ஆனால் தற்போது 15 குவிண்டாலில் இருந்து 20 குவிண்டால் வரை மட்டுமே மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு மக்காச்சோளத்தை வாங்கிய வியாபாரிகள் குவிண்டால் ரூ.2500 வரை வாங்கிச் சென்றனர்.ஆனால் தற்போது அதனுடைய விலை குறைந்து ரூ.2300- க்கு வியாபாரிகள் வாங்குகின்றனர்.மேலும் அறுவடை செய்து வரும் சோளம் ஈரமாக இருப்பதால் மேலும் விலை குறைத்து வியாபாரிகள் கேட்பதால் அறுவடை செய்த சோளத்தை நெடுஞ்சாலையில் பரவலாக கொட்டி வைத்து காய வைக்கும் நிலை உள்ளது. சோளத்தின் மகசூலும் குறைந்து விலையும் வீழ்ச்சி அடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com