இன்று முதல் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் முக்கிய மாற்றம்

நெல்லை, சார்மினார், ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைககளை தெற்கு ரெயில்வே மாற்றம் செய்துள்ளது.
இன்று முதல் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் முக்கிய மாற்றம்
Published on

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக எழும்பூர் நிலையத்தில் இருந்து இயக்கக்கூடிய சில ரெயில்கள் தாம்பரம் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி,

திருநெல்வேலியில் இருந்து எழும்பூர் வரை இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. ஆனால் எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்கிறது.

இதே போல, ராமேசுவரம் - எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் மறுஅறிவிப்பு வரை தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. இந்த 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களும் எழும்பூருக்கு தற்காலிகமாக வருவது நிறுத்தப்பட்டுள்ளது.

தாம்பரம்- ஐதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. எனவே பயணிகள் அதற்கேற்றவாறு பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com