டாக்டர் சுப்பையா வழக்கில் பெரும் தவறு உள்ளது: சுப்ரீம் கோர்ட்டு காட்டம்

பொன்னுசாமி மற்றும் மேரி புஷ்பம் தவிர அனைத்து குற்றவாளிகளும் உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
டாக்டர் சுப்பையா வழக்கில் பெரும் தவறு உள்ளது:  சுப்ரீம் கோர்ட்டு காட்டம்
Published on

சென்னை,

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சு கிராமம் பகுதியில் ரூ.10 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கர் நிலம் தொடர்பான பிரச்சினையில், நரம்பியல் மருத்துவர் சுப்பையா என்பவர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் 2013-ஆம் ஆண்டு செப்.9-ஆம் தேதி பட்டப்பகலில் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டார்.

டாக்டர் சுப்பையா சென்னை அரசு பொது மருத்துவமனையில் நரம்பியல் நிபுணராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பிறகு, சென்னை அபிராமபுரம், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சொத்து தகராறு பிரச்சினை காரணமாக நரம்பியல் மருத்துவரான சுப்பையா, கூலிப்படையினரால் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மருத்துவர் சுப்பையாவின் உறவினரான பொன்னுச்சாமி, அவரு டைய மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், போரிஸ், பேசிலின் மற்றும் நண்பர்களான வில்லியம்ஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசு ராஜன், முருகன், செல்வ பிரகாஷ், ஐயப்பன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஐய்யப்பன் என்பவர் அப்ரூவர் ஆகினார். இது தொடர்பாக கடந்த 2015ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.மேலும் வழக்கின் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கிய சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதிகள், குற்றம் சாட்டபட்ட பொன்னுச்சாமி, மேரி புஷ்பம், வில்லியம்ஸ், ஏசு ராஜன், போரிஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார். செல பிரகாஷ், முருகன், பேசில் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார்.

இதில், பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்வ பிரகாஷ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும் மேரி புஷ்பம், ஏசு ராஜன் ஆகி யோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதே வேளையில் அப்ரூவரான ஐயப்பன் அரசு சாட்சி என்பதால் அவருக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை. விசாரணை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப் பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் மீதான குற்றச் சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை என கூறி அவர்களின் தண்டனையை ரத்து செய்து வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கியது.

சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு, கொலை செய்யப் பட்ட மருத்துவர் சுப்பையா மனைவி ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டருந்தது. பின்னர் சுப்பையாவின் மனைவி தாக்கல் செய்த மனுவை தமிழ்நாடு அரசின் மனுவோடு இணைத்து ஒரே மனுவாக மாற்றப்பட்டது இதனையடுத்து, இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணை ஏற்றுகொள்ளப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் இன்று சுப்ரீம் கேர்ட்டு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

டாக்டர் சுப்பையா வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவில் பெரும் தவறு உள்ளது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை முறையாக ஆராயாமல் சென்னை ஐகோர்ட்டு குற்றவாளிகளை விடுதலை செய்து தீர்ப்பளித்து இருக்கிறது.

இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது சரியல்ல. அதை வேளையில் இந்த வழக்கில் உச்சபட்ச தண்டணை விதிக்க மாட்டோம் என்று ஏற்கனவே இந்த நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருந்தாலும், குற்றவாளிகள் தங்களது தண்டனையில் இருந்து தப்ப முடியாது.

விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவில் சில மாற்றங்கள் செய்கிறோம். அதன்படி மருத்துவர் சுப்பையா கொலை குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனையை விதிக்கிறோம். இந்த வழக்கில் குற்றவாளிகளாக பொன்னுசாமி மற்றும் மேரி புஷ்பம் ஆகியோர் அவர்களின் மகன்களின் தூண்டுதலின் பேரிலேயே விவகாரத்தில் இந்த ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

எனவே, வயது முதிர்ந்தவர்களான பொன்னுசாமி மற்றும் மேரி புஷ்பம் ஆகியோர் தங்களின் தண்டனை குறைப்பு தொடர்பாக தமிழ்நாடு கவர்னருக்கு மனு அளிக்க வேண்டும் என்றும், அந்த மனுவை பரிசீலித்து கவர்னர் முடிவெடுக்கும் வரை இருவருக்கும் ஏற்கனவே வழங்கப்பட்ட ஆயுள் தண்ட னையை நிறுத்தி வைக்கிறோம்.

பொன்னுசாமி மற்றும் மேரி புஷ்பம் தவிர அனைத்து குற்றவாளிகளும் உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com