மரத்தின் அடியில் பட்டாசு தயாரிப்பு

விதிகளை மீறி மரத்தின் அடியில் பட்டாசு தயாரிக்கப்பட்டது.
மரத்தின் அடியில் பட்டாசு தயாரிப்பு
Published on

சிவகாசி, 

சிவகாசி உட்கோட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையம் பகுதியில் உள்ள சில பட்டாசு ஆலைகளில் விதிகளை மீறி பட்டாசு தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் காளையார்குறிச்சி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஆலையில் மரத்தடியில் அமர்ந்து தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த ஆலையில் இருந்த வீரகாளிமுத்து (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சித்தமநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு கிடங்கில் வெளியூர்களுக்கு அனுப்ப பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அது குறிப்பிட்ட உயரத்துக்கும் அதிக உயரத்தில் வைத்திருந்ததாக கூறி எம்.புதுப்பட்டி போலீசார் அந்த டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை சேர்ந்த ராமச்சந்திராஷா என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com