மலைக்கண்மாயில் மீன்பிடி திருவிழா

பொன்னமராவதி அருகே மலைக்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
மலைக்கண்மாயில் மீன்பிடி திருவிழா
Published on

மீன்பிடி திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா தேரடி மலம்பட்டியில் மலைக்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. மீன்பிடி திருவிழாவை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான கிராமமக்கள் கண்மாயில் கூடினர். ஊர் முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையில் வெள்ளை துண்டை வீசி மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

சமைத்து சாப்பிட்டனர்

இதையடுத்து அங்கு கூடியிருந்த பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கண்மாயில் இறங்கி ஊத்தா, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி உள்ளிட்ட பல வகை மீன்களை பிடித்தனர்.

பின்னர் தங்களுக்கு கிடைத்த மீன்களை பொதுமக்கள் வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டனர். மேலும் மற்ற மீன்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com