லால்குடியில் ஆணழகன் போட்டி

லால்குடியில் ஆணழகன் போட்டி நடந்தது.
லால்குடியில் ஆணழகன் போட்டி
Published on

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி லால்குடியில் இந்திய பிட்னஸ் கூட்டமைப்பு நிர்வாகி விமலநாதன் மற்றும் கூட்டமைப்பு சார்பில் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர்.

ஐ.எப்.எப். நிறுவன தலைவர் ஜெகநாதன், பொருளாளர் தனசேகர், நிர்வாகிகள் தீபராணி, குமரவேல் ஆகியோர் போட்டியின் நடுவர்களாக பங்கேற்றனர். கர்நாடகாவை சேர்ந்த நடராஜூவ் முதலிடத்தை பிடித்து மிஸ்டர் தென்னிந்தியா பட்டத்தை வென்றார். தமிழகத்தைச் சேர்ந்தவர்களான ஷேக் பரித் 2-ம் பரிசையும், கோபி கிருஷ்ணன் 3-ம் பரிசையும் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் லால்குடி நகராட்சி தலைவர் துரை மாணிக்கம், பூவாளூர் பேரூராட்சி தலைவர் புவனேஸ்வரி பால்ராஜ், பூவாளூர் நகர செயலாளர் பன்னீர் செல்வம் மற்றும் ஏராளமானோர் பங்கேற்று போட்டியை பார்வையிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com